செய்திகள்
பக்கற் பால் பருகியவர்களுக்கு நேர்ந்த கதி : 8 பேர் வைத்தியசாலையில்

பக்கற் பால் ஒவ்வாமையினால் திடீர் சுகயீனமடைந்த எட்டுப்பேர் கொழும்பு தேசிய வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.
ஒன்றிணைந்த எதிரணியினால் நடத்தப்பட்ட பேரணியில் பங்கேற்றிருந்தவர்களுக்கு வழங்கப்பட்டிருந்த பக்கற் பால் பருகியமையினால் இவர்களுக்கு திடீர் சுகயீனம் ஏற்பட்டுள்ளது. இதனையடுத்து இவர்கள் வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.
இந்த சம்பவம் தொடர்பில் பொலிஸார் விசாரணைகளை மேற்கொண்டு வருவதோடு, உரிய சிகிச்சை வழங்கப்பட்டு பெற்று வருவதாக வைத்தியசாலை வட்டாரங்கள் தெரிவித்துள்ளன.