செய்திகள்

பக்தர்களின் பங்குபற்றல் இன்றி கதிர்காமம் ஆடிவேல் விழா

கதிர்காமம் முருகன் ஆலயத்தின் வருடாந்த ஆடிவேல் விழா உற்சவம், இம்முறை பக்தர்களின் பங்குபற்றல் இன்றி, சமய சடங்குகளுக்கு மாத்திரம் முன்னுரிமையளிக்கவுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

இலங்கையில் ஊவா மாகாணத்திலுள்ள அருணகிரிநாதரால் திருப்புகழ் பாடப்பட்ட தலமாக இந்துக்களால் கருதப்படும் கதிர்காமம் முருகன் ஆலயத்தில் எதிர்வரும் 10ஆம் திகதி முதல் 23 ஆம் திகதி வரை வருடாந்த ஆடிவேல் விழா உற்சவம் இடம்பெறவுள்ளது.

கொரோனா தொற்று அச்சம் காரணமாக 5 நடன குழுக்கள் மாத்திரமே இணைத்துக்கொள்ள தீர்மானிக்கப்பட்டுள்ளதாக ஆடிவேல் விழா தொடர்பில் முடிவெடிடுக்கும் முழு தெரிவித்துள்ளது.

இந்துக்களின் வழிபாட்டுத் தலமாக மட்டுமன்றி சிங்களவர்களினாலும் வழிபாட்டுக்குரிய தலமாக விளங்கும் கதிர்காமம் முருகன் ஆலயம் பௌத்த சிங்களவர்களினால் றூகுனு தேவாலயம் என தற்போது அழைக்கப்படுகின்றது.

Related Articles

Back to top button