செய்திகள்

பக்தர்களின் பங்குபற்றல் இன்றி கதிர்காமம் திருவிழா நாளை ஆரம்பம்.!

இலங்கையில் ஊவா மாகாணத்திலுள்ள அருணகிரிநாதரால் திருப்புகழ் பாடப்பட்ட தலமாக இந்துக்களால் கருதப்படும் கதிர்காமம் முருகன் ஆலயத்தில் கொடியேற்ற விழா நாளை 10 ஆம் திகதி ஆரம்பமாகவுள்ளது.

நாளைய தினம் முதலாவது பெரஹர மூலம் வீதி உலா நடைபெறும் என கதிர்காம ஆலயத்தின் பஸ்நாயக்க நிலமே டிஷன் குணசேகர தெரிவித்துள்ளார்.

இறுதி நாள் பெரஹர 23ஆம் திகதி இரவு வீதி உலா வரவுள்ளதாகவும் பெரஹராவின் சம்பிரதாய சடங்குகள் அனைத்தும் முறையாக நடைபெறும் எனக் கூறிய அவர், கொரோனா தொற்று அச்சம் காரணமாக இம்முறை உற்சவம் பக்தர்களின் பங்குபற்றல் இன்றி நடைபெறும் எனவும் தெரிவித்தார்.

எனினும் பெரஹராவில் யானைகள், நாட்டியங்கள் உள்ளிட்ட கலாசார அம்சங்கள் அனைத்தும் இடம்பெறும் எனவும் அவை சுகாதார நெறிமுறைகளுக்கு அமைய நடத்தப்படும் என்றும் நிலமே தெரிவித்தார்.

ஜூலை 24 ஆம் திகதி நீர் வெட்டுடன் ஆடிவேல் விழா உற்சவம் பூர்த்தி அடையும் என்றும் தெரிவித்தார்.

Related Articles

Back to top button