விளையாட்டு

பங்களாதேஷ் அணியுடன் இடம்பெற்ற ஒருநாள் போட்டியில் இலங்கைக்கு தோல்வி..

இலங்கை அணிக்கு எதிரான முதலாவது சர்வதேச ஒருநாள் கிரிக்கெட் போட்டியில் பங்களாதேஷ் 33 ஓட்டங்களால் வெற்றியீட்டியது.

டாக்காவில் நடைபெற்ற போட்டியில் முதலில் துடுப்பெடுத்தாடிய பங்களாதேஷ் 50 ஓவர்களில் 6 விக்கெட் இழப்புக்கு 257 ஓட்டங்களை பெற்றது.

அணித்தலைவர் தமிம் இக்பால் 52 ஓட்டங்களையும் மஹ்மதுல்லா 54 ஓட்டங்களையும் பெற்றனர்.

விக்கெட் காப்பாளரான முஸ்பிகுர் ரஹூம் 84 ஓட்டங்களை அதிகபட்சமாக பெற்றார்.

தனஞ்சயடி சில்வா 03 விக்கெட்டுக்களை வீழ்த்தினார்.

வெற்றியிலக்கை நோக்கி களமிறங்கிய இலங்கை அணி 82
ஓட்டங்களுக்கு முதல் மூன்று விக்கெட்டுக்களையும் இழந்தது.

தனுஸ்க குணதிலக்க 21 ஓட்டங்களையும் பெத்தும் நிஸ்ஸங்க 8 ஓட்டங்களையும் பெற்று ஆட்டமிழந்தனர்.

உப தலைவர் குசல் மென்டிஸ் 24 ஒட்டங்களையும் அணித்தலைவர் குசல் ஜனித் பெரேரா 30 ஓட்டங்களையும் பெற்றனர்.

ஒரு பக்கம் விக்கெட்டுக்கள் வீழ்த்தப்பட்டாலும் சகலதுறை வீரர் வனிந்து ஹசரங்க அதிரடியாக 74 ஓட்டங்களை அதிகபட்சமாக பெற்றார்.

இலங்கை அணியால் 48 ஓவர்களில் சகல விக்கெட்டுக்களையும் இழந்து 224 ஓட்டங்களையே பெற முடிந்தது.

மெஹிடி ஹசான் மிராஸ் 4 விக்கெட்டுக்களை வீழ்த்தியதுடன் முஸ்பிகுர் ரஹூம் போட்டியின் சிறப்பாடடக்காரர் விருதை வென்றார்.

மூன்று போட்டிகள் கொண்ட சர்வதேச ஒருநாள் தொடரில் 01 க்கு பூச்சியம் என பங்களாதேஷ் முன்னிலை பெற்றுள்ளது.

Related Articles

Back to top button
WP2Social Auto Publish Powered By : XYZScripts.com