செய்திகள்விளையாட்டு

பங்களாதேஷ் அணி முதலில் துடுப்பெடுத்தாட தீர்மானம்.!

இலங்கை பங்களாதேஷ் அணிகளுக்கு இடையிலான இரண்டாவது சர்வதேச ஒருநாள் கிரிக்கெட் போட்டி இன்று நடைபெறவுள்ளது. போட்டியில் நாணய சுழற்சியை வென்ற பங்களாதேஷ் அணி முதலில் துடுப்பெடுத்தாட தீர்மானித்துள்ளது. டாக்கா மைதானத்தில் நடைபெறவுள்ள போட்டி இன்று நண்பகல் 12 முப்பதுக்கு ஆரம்பமாகவுள்ளது. 03 போட்டிகள் கொண்ட சர்வதேச ஒருநாள் தொடரில் 01 க்கு பூச்சியம் என பங்களாதேஷ் முன்னிலைப் பெற்றுள்ளது.

இந்நிலையில் இன்றைய போட்டியில் வெற்றியீட்டும் பட்சத்தில் பங்களாதேஷ் ஒருநாள் தொடரை கைப்பற்றும். இது இலங்கை அணிக்கு எதிராக மூன்று போட்டிகள் கொண்ட சர்வதேச ஒருநாள் தொடரொன்றை பங்களாதேஷ் வெற்றிக் கொள்ளும் முதல் சந்தர்ப்பமாக பதிவாகும் என்பது குறிப்பிடத்தக்கது.

Related Articles

Back to top button
WP2Social Auto Publish Powered By : XYZScripts.com