விளையாட்டு

பங்களாதேஷ் தொடரில் கோஹ்லிக்கு ஓய்வு!

பங்களாதேஷுக்கு எதிரான இருபதுக்கு 20 தொடரில் இந்திய அணித்தலைவர் விராட் கோஹ்லிக்கு ஓய்வளிக்கப்பட்டுள்ளது.

இந்த தொடரில் ரோஹித் சர்மா இந்திய அணியை வழிநடத்தவுள்ளார்.

சஞ்சு சம்சொன் ,ரிஷப் பாண்ட் , ஷிவம் டியூப் ஆகியோருக்கு இருபதுக்கு 20 தொடரில் வாய்ப்பளிக்கப்பட்டுள்ளது.

இந்திய மற்றும் பங்களாதேஷ் அணிகளுக்கு இடையிலான 03
போட்டிகளை கொண்ட சர்வதேச இருபதுக்கு 20 தொடர் அடுத்த மாதம் மூன்றாம் திகதி ஆரம்பமாகவுள்ளது.

இதனிடையே பங்களாதேஷுக்கு எதிரான இரண்டு போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடருக்கான இந்திய குழாமும் அறிவிக்கப்பட்டுள்ளது.

இந்த தொடரில் விராட் கோஹ்லி இந்தியாவை வழிநடத்தவுள்ளார்.

சுப்மன் கில் மற்றும் குல்தீப் யாதவ் ஆகியோருக்கும் இந்த தொடரில் வாய்ப்பளிக்கப்பட்டுள்ளது.

இந்திய மற்றும் பங்களாதேஷ் அணிகளுக்கு இடையிலான டெஸ்ட் தொடர் அடுத்த மாதம் 14 ஆம் திகதி இந்தோரில் ஆரம்பமாகவுள்ளது.

Related Articles

Back to top button