...
செய்திகள்பதுளைமலையகம்

பசறையில் இரு முச்சக்கர வண்டிகள் நேருக்கு நேர் மோதி விபத்து.

பசறை பதுளை பிரதான வீதியில் பசறை சுகாதார பணிமனைக்கு முன்பாக இரு முச்சக்கர வண்டிகள் நேருக்கு நேர் மோதி விபத்துக்குள்ளாகியுள்ளது.

முச்சக்கர வண்டியில் பயணித்த 2 1/2 வயது குழந்தை ஒன்றும் 27 வயது பெண் ஒருவரும் இரு முச்சக்கர வண்டி சாரதிகளும் பசறை வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டப் பின்னர் பலத்த காயங்களுக்கு உள்ளான பெண்ணும் 2 1/2 வயதுடைய குழந்தையும் முச்சக்கரவண்டி சாரதி ஒருவரும் மேலதிக சிகிச்சைகளுக்காக பதுளை பொது வைத்தியசாலைக்கு அனுப்பி வைக்கப்பட்டுள்ளனர்.

மற்றுமொரு முச்சக்கர வண்டி சாரதி பசறை வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சைப் பெற்று வருகின்றார். மேலதிக விசாரணைகளை பசறை பொலிஸார் மேற்கொண்டு வருகின்றனர்.

ராமு தனராஜா

Related Articles

Back to top button


Thubinail image
Screen