செய்திகள்பதுளைமலையகம்

பசறையில் கசிப்பு உற்பத்தியில் ஈடுபட்ட 30 வயதுடைய இளைஞன் கைது.

பசறை பொலிஸ் பிரிவிற்கு உட்பட்ட மீதும்பிடி குடுகல்பத்தன பகுதியில் சட்டவிரோதமான முறையில் கசிப்பு உற்பத்தியில் ஈடுபட்ட 30 வயதுடைய நபர் ஒருவர் இன்று (25/06) கைது செய்யப்பட்டுள்ளார்.

பசறை பொலிஸாருக்கு கிடைக்கப்பெற்ற இரகசிய தகவலை அடுத்து பசறை பொலிஸ் நிலைய பொறுப்பதிகாரி பாலித செனவிரத்ன அவர்களின் ஆலோசனையில் உப பொலிஸ் பரிசோதகர் சுனில் தலைமையிலான குழுவினர்; மீதும்பிடிய குடுகல்பத்தன பகுதியில் மிகவும் சூட்சுமமான முறையில் கசிப்பு உற்பத்தியில் ஈடுபட்டிருக்கும் இடத்திற்கு விரைந்து சுற்றிவளைப்பினை மேற்கொண்டதுடன் 30 வயதுடைய நபர் ஒருவரையும் கைது செய்ததோடு 112500 மில்லி லீட்டர் கோடாவும் கைப்பற்றப்பட்டுள்ளது.

மேலதிக விசாரணைகளை பசறை பொலிஸார் மேற்கொண்டு வருகின்றனர். அத்துடன் சந்தேக நபரை நீதிவான் நீதிமன்றில் ஆஜர் படுத்துவதற்கான நடவடிக்கைகளை பசறை பொலிஸார் மேற்கொண்டு வருகின்றனர்.

ராமு தனராஜா

Related Articles

Back to top button