செய்திகள்பதுளைமலையகம்

பசறையில் கஞ்சா போதைப்பொருளுடன் இருவர் கைது.

பசறை பொலிஸாருக்கு முச்சக்கர வண்டி ஒன்றில் கஞ்சா போதைப்பொருள் கடத்துவதாக கிடைக்கப்பெற்ற இரகசிய தகவலை அடுத்து பசறை பொலிஸ் நிலைய பொறுப்பதிகாரி பாலித செனவிரத்ன அவர்களின் ஆலோசனையின் பேரில் உதவி பொலிஸ் அதிகாரி இஷார தலைமையிலான குழுவினர் கமேவெலயிலிருந்து பசறை நோக்கி வந்துகொண்டிருந்த முச்சக்கர வண்டி ஒன்றை வீதி சோதனை சாவடிக்கருகில் சென்று வழிமறித்து சோதனைக்கு உட்படுத்தியிருந்தனர்.

அம்முச்சக்கர வண்டியில் சந்தேகத்துகிடமாக போதைப்பொருள் எதுவும் காணப்படவில்லை இருப்பினும்; முச்சக்கரவண்டியில் இருந்த இளைஞர்கள் இருவரையும் சோதனைக்கு உட்படுத்திய போது இருவரிடமும் தலா 5 கிராம் கஞ்சா போதைப்பொருளும் 17000 ரூபாய் பணமும் மீட்கப்பட்டுள்ளதோடு 30, 29 வயதுகளையுடைய குறித்த இரண்டு இளைஞர்களும் கைது செய்யப்பட்டுள்ளனர்.

இவர்களிடம் விசாரணைகளை மேற்கொண்ட போது கமேவெல பகுதியை சேர்ந்த சந்தேக நபர் ஒருவரின் வீட்டில் அவரது தாயார் தமது கடைசி மகனிடம் கவனமாக வைக்க சொல்லி கொடுத்த சீட்டு பணம் 40000 ரூபாவை அவரது மனைவி அலுமாரியில் வைத்திருப்பதை அவதானித்த மூத்த மகனான சந்தேக நபர் அந்த பணத்தை திருடியதோடு அலுப்வத்தை பகுதிக்கு சென்று தனது நண்பரையும் இணைத்துக்
கொண்டு வாடகைக்கு முச்சக்கர வண்டி ஒன்றை அமர்த்தி கொண்டு பசறைக்கு வந்த வேளையிலேயே பசறை பொலிஸாரால் கைது செய்யப்பட்டுள்ளனர்.

குறித்த நபர்களில் ஒருவர் கமேவெல பகுதியையும் மற்றொருவர் அலுப்வத்தை பகுதிகளையும் சேர்ந்தவர்களாவர்

குறித்த சம்பவம் இன்றைய தினம் (25/06) இடம்பெற்றுள்ளது.
சந்தேக நபர்கள் இருவரையும் நீதிவான் நீதிமன்றில் ஆஜர் படுத்துவதற்கான நடவடிக்கைகளை பசறை பொலிஸார் மேற்கொண்டு வருகின்றனர்.

குறித்த நபர் போதை பாவனைக்கு அடிமையானவர் என்பது குறிப்பிடத்தக்கது.

ராமு தனராஜா

Related Articles

Back to top button