பதுளைமலையகம்

பசறை எரிபொருள் நிலையத்தில் முச்சக்கர வண்டி சாரதிகளுக்கு முன்னுரிமை

தற்போது நாட்டில் ஏற்பட்டுள்ள எரிபொருள் தட்டுப்பாட்டினை கருத்தில்கொண்டு பசறை பிரதேசத்தில் உள்ள தமது பிரதான தொழிலான முச்சக்கர வண்டிகளை செலுத்தும் சாரதிகளுக்கு முன்னுரிமை வழங்கப்பட்டு கூப்பன் அடிப்படையில் கிராமிய கூட்டுறவு சங்கத்திற்கு சொந்தமான (IOC) எரிபொருள் நிரப்பும் நிலையத்தில் எரிபொருள் (23/06) முதல் வழங்கப்பட்டு வருகின்றது.

இந்த புதிய திட்டத்தில் பசறை பொலிஸாரின் உதவியுடன் சுமார் 100 முச்சக்கர வண்டிகளுக்கு எரிபொருள் வழங்கப்பட்டு வருகின்றது.

இவ்வேலைத் திட்டம் கிராமிய கூட்டுறவு சங்கத்தின் தலைவரின் ஏற்பாட்டில் முன்னெடுக்கப்பட்டுள்ளது.

இதற்காக முச்சக்கரவண்டி சங்கத்தின் தலைவருக்கும் பசறை பொலிஸ் நிலைய பொருப்பதிகாரிக்கும் தமது வாழ்த்துக்களையும் நன்றிகளையும் முச்சக்கர வண்டி சாரதிகள் தெரிவிக்கின்றனர் .

ராமு தனராஜா

Related Articles

Back to top button