செய்திகள்பதுளைமலையகம்

பசறை எல்டப் அப்பர் டிவிஷன் பகுதியில் இயங்கி வந்த கசிப்பு உற்பத்தி நிலையம் பொலிஸாரினால் முற்றுகை!

பசறை பொலிஸ் பிரிவிற்கு உட்பட்ட எல்டப் அப்பர் டிவிஷன் பகுதியில் மிக நீண்ட காலமாக மிகவும் சூட்சுமமான முறையில் கசிப்பு உற்பத்தியில் ஈடுபட்ட கசிப்பு உற்பத்தி நிலையமொன்றை பசறை பொலிஸார் நேற்று 06/22 முற்றுகையிட்டுள்ளனர்.

பசறை பொலிஸாருக்கு கிடைக்கப்பெற்ற இரகசிய தகவலை அடுத்து பசறை பொலிஸ் நிலைய பொறுப்பதிகாரி பாலித செனவிரத்ன அவர்களின் ஆலோசனையின் பேரில் உதவி பொலிஸ் அதிகாரி சுனில் தலைமையிலான நிரஞ்ஜன் , சமில், சமன், பாலித ஆகியோர் உடன் எல்டப் அப்பர் டிவிஷன் பகுதிக்கு விரைந்தனர். மிகவும் சூட்சுமமான முறையில் மிக நீண்ட காலமாக கசிப்பு உற்பத்தியில் ஈடுபட்டு வந்த கசிப்பு உற்பத்தி நிலையமொன்றை முற்றுகையிட்டனர்.

இதன்போது 180750 மில்லி லீட்டர் கோடாவும் 375 மில்லி லீட்டர் கசிப்பும் 37,39 வயதுகளையுடைய இரண்டு சந்தேக நபர்களையும் கைது செய்துள்ளனர்.

மேலதிக விசாரணைகளை பசறை பொலிஸார் மேற்கொண்டு வருகின்றனர். சந்தேக நபர்களை நீதிவான் நீதிமன்றில் ஆஜர் படுத்துவதற்கான நடவடிக்கைகளையும் மேற்கொண்டு வருகின்றனர்.

செய்தி பசறை ராமு தனராஜா

Related Articles

Back to top button