மலையகம்
பசறை – எல்டொப்பில் பதட்டம்/ விசாரணைக்கு 3 குழுக்கள்
விசேட அதிரடிப்படையினரால் பசறை – எல்டொப் பகுதியில் ஒருவர் தாக்கப்பட்டு வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.
அங்கு சட்டவிரோத மதுபான விற்பனை இடம்பெறுவதாக தெரிவித்து, சுற்றிவளைப்புக்குச் சென்ற எட்டு படையினரால் இந்த தாக்குதல் நடத்தப்பட்டுள்ளது.
இதனை அடுத்து பொதுமக்கள் அதிரடிப்படையினருக்கு எதிராக கற்களைக் கொண்டு தாக்குதல் நடத்தியதாக காவற்துறையினர் தெரிவிக்கின்றனர்.
இதில் விசேட அதிரடிப்படையைச் சேர்ந்த ஒருவர் காயமடைந்து வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.
சம்பவம் தொடர்பில் விசாரணை செய்வதற்காக 3 காவற்துறை குழுக்கள் உருவாக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.
நன்றி 5 வரி செய்திகள்-http://aivaree.com/