...
பதுளைமலையகம்

பசறை கமேவலயில் பெற்றோர்களால் கைவிடப்பட்ட மூன்று பிள்ளைகளுக்கு உதவிக்கரம் நீட்டியது ‘உதவும் கரங்கள்’ அமைப்பு.

பதுளை மாவட்டம் பசறை கமேவல 05ம் கட்டை பிரதேசத்தில் பெற்றோர்களால் கைவிடப்பட்ட மூன்று பிள்ளைகளும் தற்போது தனது பாட்டியின் அரவணைப்பில் உணவு, உடை, உறையுள், ஆகிய அடிப்படை தேவைகளை கூட பூர்த்தி செய்து கொள்ள முடியாமல் போராடிக்
கொண்டிருக்கின்றனர்.

இக்குடும்பத்திற்கு இரத்தினபுரி உதவும் கரங்கள் அமைப்பின் மூலம் நிர்மாணிக்கப்படுகின்ற வீட்டு திட்டத்தின் 2ம் கட்ட பணிகள் இன்று காலை ஆரம்பித்து வைக்கப்பட்டதோடு ஏனைய கட்டுமான பணிகள் இடம்பெற்று கொண்டு இருக்கின்றமையைக் கானலாம்.

உங்களின் உதவிகள் ஒத்துழைப்புகளை இவ் வீட்டின் ஏனைய வேலைகளை
நிர்மாணித்து கொள்ள அன்போடு எதிர்பார்கின்றோம்.

“ஏழையின் சிரிப்பில் இறைவனைக் காண்போம் வாரீர்”

தலைவர்
ஆர். ரமேஷ்வரன் உட்பட
நிர்வாக குழுவினரும் அங்கத்தினர்கள்

Related Articles

Back to top button


Thubinail image
Screen