...
செய்திகள்பதுளைமலையகம்

பசறை கமேவெல கம்மான பியாஜோ ரக முச்சக்கர வண்டி தீயில் முற்றாக கருகியது

பசறை பொலிஸ் பிரிவிற்கு உட்பட்ட கமேவெல கம்மான பகுதியில் பியாஜோ ரக முச்சக்கர வண்டி ஒன்று தீப்பிடித்து எரிந்து முற்றாக சேதமடைந்துள்ளது.

குறித்த முச்சக்கர வண்டி கமேவெல கம்மான பகுதிக்கு செல்லும் வீதி ஓரமாக (01/01) நிறுத்திவைத்துவிட்டு உரிமையாளர் வீட்டுக்கு சென்றுள்ளார்.

பின்னர் நேற்று காலை சுமார் 3 மணியளவில் முச்சக்கர வண்டி நிறுத்தி வைக்க பட்டிருந்த இடத்துக்கு முன்பாக இருந்த வீட்டில் உள்ள நபர் வெளிலே வந்து பார்த்த போது முச்சக்கர வண்டி தீப்பிடித்து எரிந்து கொண்டிருப்பதை அவதானித்துள்ளார்.

இதன்போது கூக்குரல் இட்டு முச்சக்கர வண்டி உரிமையாளரை வரவழைத்து தீயை கட்டுப்படுத்த முயற்சி செய்துள்ளனர். இருப்பினும் முச்சக்கர வண்டி முற்றாக சேதமடைந்துள்ளது.

இதன்போது பசறை பொலிஸார் சம்பவ இடத்திற்கு சென்று பல கோணங்களிலும் விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்.

ராமு தனராஜா

Related Articles

Back to top button


Thubinail image
Screen