...
செய்திகள்

பசறை கோணக்கலை காவத்தை தோட்டத்தில் அமையப்பெற்றுள்ள பழைமை வாய்ந்த ஆலய கதவு உடைப்பு

பசறை கோணக்கலை காவத்தை தோட்டத்தில் அமையப்பெற்றுள்ள 50 வருடங்கள் பழைமைவாய்ந்த சிவசுப்ரமணியர் ஆலயத்தின் காணப்பட்ட உலோகத்திலான முருகப்பெருமான் சமேதராய் எழுந்தருளி சிலை இனந்தெரியாத நபர்களால் கோயில் கதவு உடைக்கப்பட்டு திருடப்பட்டுள்ளதாக காவத்தை தோட்ட பொதுமக்கள் தெரிவிக்கின்றனர்.

இன்று மாலை வேளையில் கோயில் கதவு திறக்கப்பட்டிருந்த நிலையில் சிலை காணாமல் இருப்பதை அறிந்த தோட்ட மக்கள் பசறை பொலிஸாருக்கு முறைப்பாடு செய்துள்ளதாகவும் தெரிவித்தனர்.

குறித்த முருகப்பெருமான் வள்ளி சமேதராய் எழுந்தருளி சிலை ஆலயத்தில் காணாமல் போயுள்ளமைத் தொடர்பில் பசறை பொலிஸார் மேலதிக விசாரணைகவிசாரணைகளை முன்னெடுத்து வருகின்றனர்.

நடராஜா மலர்வேந்தன்

Related Articles

Back to top button


Thubinail image
Screen