...
காலநிலைபதுளைமலையகம்

பசறை – கோணக்கலை மேற்பிரிவு தோட்ட மக்கள் மண்சரிவு அபாய நிலையை எதிர்நோக்கியுள்ளனர்.

நிலவி வருகின்ற சீரற்ற காலநிலையால் பசறை பிரதேச கோணக்கலை மேற்பிரிவு தோட்ட மக்கள் மண்சரிவு அபாய நிலையை எதிர்நோக்கியுள்ளனர்.

நான்காம் இலக்க லயன் தொடர்குடியிருப்பைச் சேர்ந்த எட்டு குடும்பங்களை சேர்ந்த 35 பேர் கோணக்கலை மேற்பிரிவு பிள்ளை பராமரிப்பு நிலையங்களில் தற்காலிகமாக தங்க வைக்கப்பட்டுள்ளனர்.

இவர்களுக்கான அத்தியாவசிய உலர்உணவு பொருட்களை வழங்குவதற்கான ஏற்பாடுகளை பசறை பிரதேச செயலாளர் மேற்கொண்டு வருகின்றார்.

இத்தோட்டத்தில் ஏற்பட்ட மண்சரிவு அனர்த்த நிலை காரணமாக 48 குடும்பங்களை சேர்ந்தோருக்கு மலைநாட்டு புதிய கிராமங்கள் அமைச்சின் ஊடாக கடந்த காலத்தில் கோணக்கலை கீழ்பிரிவு பகுதியில் புதிய வீடுகள் அமைத்து குடியமர்த்தப்பட்டமைக் குறிப்பிடத்தக்கது.

இருப்பினும் எஞ்சியுள்ள நூற்றுக்கு மேற்பட்ட குடும்பங்களைச் சேர்ந்த இத்தோட்ட மக்கள் மழைக்காலங்களில் அச்சநிலையில் வாழ்ந்து வருகின்றனர்.

– நடராஜா மலர்வேந்தன்

Related Articles

Back to top button


Thubinail image
Screen