செய்திகள்பதுளைமலையகம்

பசறை சுகாதார பிரிவில் இன்று அதிகளவிலான கொரோனா தொற்றாளர்கள் அடையாளம்!

பசறை சுகாதார பிரிவிற்கு உட்பட்ட பகுதிகளில் இன்றைய தினம் (08/07) அதிகளவிலான கொரோனா தொற்றாளர்கள் அடையாளம் காணப்பட்டுள்ளனர்.

கடந்த சில தினங்களுக்கு முன் மேற்கொள்ளப்பட்ட PCR பரிசோதனைகளின் முடிவுகள் இன்றைய தினம் கிடைக்கப்பெற்றன. இவற்றுள் 30 பேர் தொற்ளாளர்களாக அடையாளம் காணப்பட்டுள்ளனர்.

இதில் பிளானிவத்தைப் பகுதியில் இரண்டு லயன் குடியிருப்பில் 11 பேருக்கு மேற்கொள்ளப்பட்ட PCR பரிசோதனைகளில் 11 பேருக்கும் தொற்று உறுதிப்படுத்தப்பட்டுள்ளது.

பிளானிவத்தையிலுள்ள இரு லயன் குடியிருப்புகளையும் தனிமைப்படுத்துவதற்கான நடவடிக்கைகளை மேற்கொண்டுள்ளதோடு தொற்றாளர்களை தனிமைப்படுத்தல் முகாமுக்கு அழைத்து செல்வதற்கான நடவடிக்கைகளை மேற்கொண்டு வருவதாகவும்; அவர்களுடன் தொடர்புகளை பேணியோருக்கு PCR பரிசோதனைகளை மேற்கொள்ளவதற்கான நடவடிக்கைகளை மேற்கொண்டு வருவதாகவும் சுகாதார பரிசோதகர்களின் மேற்பார்வையாளர் தெரிவித்தார்.

Related Articles

Back to top button