செய்திகள்பதுளைமலையகம்

பசறை நகரில் நுகர்வோர் அதிகார சபை அதிகாரிகளால் மேற்கொள்ப்பட்ட சுற்றி வளைப்பில் 10 வியாபார நிலைய உரிமையாளர்கள் மீது வழக்குப் பதிவு.

பசறை நகரில் இன்று வியாழக்கிழமை நுகர்வோர் அதிகார சபை அதிகாரிகளால் மேற்கொள்ப்பட்ட சுற்றி வளைப்பு நடவடிக்கையின் போது 10 வியாபார நிலைய உரிமையாளர்கள் மீது வழக்கு பதிவு செய்யப்பட்டுள்ளது.

அதிக விலைக்கு அரிசியை விற்பனை செய்தமை மற்றும் விலைப்பட்டியல் காட்சிப்படுத்தாமை ஆகிய குற்றங்களின் கீழ் குறித்த 10 வர்த்தகர்கள் மீதும் வழக்கு பதிவு செய்யப்பட்டுள்ளது.

குறித்த வழக்கு எதிர்வரும் 23 ஆம் திகதி பசறை நீதவான் நீதிமன்றில் விசாரணைக்கு எடுத்துக் கொள்ளப்படவுள்ளது.

ராமு தனராஜா

Related Articles

Back to top button