செய்திகள்

பசறை பகுதியில் டெங்கு நோய் தீவிரமடையும் நிலையில் சுகாதார பரிசோதகர்கள் சுற்றிவளைப்பு முன்னெடுப்பு !

பசறை பகுதியில் டெங்கு நோயாளர்கள் அதிகரித்து வரும் நிலையில் பசறை சுகாதார பரிசோதகர்களினால் பசறை நகரப்பகுதி சுற்றி வளைக்கப்பட்டு டெங்கு ஒழிப்பு வேலைத்திட்டம் முன்னெடுக்கப்பட்டது.இதன்போது குறித்த சூழல்களில் டெங்கு நோய் பரவும் விதமாக வீட்டு சுற்றுச் சூழல்கள் காணப்பட்டமையால் முப்பது ஒன்பது நபர்களுக்கெதிராக வழக்கு தொடரப்பட்டது.இதன் போது பசறை நீதவான் நீதிமன்றத்தில் குற்ற நபர்கள் ஆஜர் படுத்தப்பட்டு முப்பத்தாறு பேரிடமிருந்தும் ஒரு லட்சத்து எண்ணாயிரம் ருபாய் தண்டப்பணம் அறவிடப்பட்டது.மேலும் நீதிமன்றத்திற்கு சமூகம் தராத மூவருக்கெதிராகவும் அழைப்பானை விடுக்கப்பட்டது.சுற்றுச் சூழல்களை தூய்மையாக வைத்திருப்பதன் மூலம் டெங்கு நோய் பரவுவதை மட்டுப்படுத்தலாம் என சுகாதார பரிசோதகர்களினால் பணிப்புரை விடுக்கப்பட்டுள்ளது.

Related Articles

Back to top button