செய்திகள்பதுளைமலையகம்

பசறை-பகுதியில் நேற்று இடம்பெற்ற பஸ் விபத்தில் உயிரிழந்தவர்களின் குடும்பங்களுக்கு 50 ஆயிரம் ரூபா இழப்பீடு

பதுளை பசறை- மடூல்சீமை ஆறாம் கட்டை பகுதியில் நேற்று இடம்பெற்ற பஸ் விபத்தில் உயிரிழந்தவர்களின் இறுதிக் கிரியைகளுக்காக, அவர்களின் குடும்பங்களுக்கு தலா 50 ஆயிரம் ரூபா இழப்பீடு வழங்க தீர்மானித்துள்ளதாக போக்குவரத்து சேவை முகாமைத்துவ அமைச்சு தெரிவித்துள்ளது.

இலங்கை போக்குவரத்துரத்து சபையினூடாக இந்த நிதி வழங்கப்படவுள்ளதாக போக்குவரத்து சேவை முகாமைத்துவ அமைச்சர் திலும் அமுனுகம குறிப்பிட்டார்.

விபத்தில் உயிரிழந்தவர்களின் குடும்பங்களுக்கு இழப்பீட்டை வழங்கவும் நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாக அமைச்சர் கூறியுள்ளார்.

இந்த விபத்து தொடர்பில் விரிவான விசாரணை ஆரம்பிக்கப்படவுள்ளதாகவும் அவர் தெரிவித்தார்.

இதற்காக விசேட குழுவொன்றை உடனடியாக நியமிக்குமாறு பரிந்துரைக்கப்பட்டுள்ளது.

விபத்திற்கான பொறுப்பை அரசாங்கம் ஏற்றுக் கொள்வதாகவும் போக்குவரத்து சேவை முகாமைத்துவ அமைச்சர் திலும் அமுனுகம சுட்டிக்காட்டியுள்ளார்.

Related Articles

Back to top button
image download