
நமுனுகுலை பொலிஸ் பிரிவிற்கு உட்பட்ட கனவரல்ல 13ம் கட்டைப்பகுதியில் வாகன சாரதிகளும் பொது மக்களும் இனைந்து எரிபொருள் விலை ஏற்றத்தைக் கண்டித்தும் அரசாங்கத்தை பதவி விலகுமாறு கூறியும் கனவரல்ல 13ம் கட்டைப் பகுதியில் இன்று அதிகாலை 6.30 மணிமுதல் ஆர்ப்பாட்த்தில் ஈடுபட்டு வருகின்றனர்.
இதனால் கனவரல்ல 13 ம் கட்டைப்பகுதியிலிருந்து பண்டாரவளை செல்லும் வீதியில் போக்குவரத்து முற்றாக தடைப்பட்டுள்ளது.
இதன்போது ஆர்ப்பாட்டக்காரர்கள் வீதிகளில் டயர்களை போட்டு எரித்தும் பதாதைகளை ஏந்திகோஷங்களை எழுப்பியவாறு ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டு வருகின்றமை குறிப்பிடத்தக்கது.
ராமு தனராஜா