செய்திகள்பதுளைமலையகம்

பசறை பதுளை பிரதான வீதியில் முச்சக்கர வண்டி பேருந்து நேருக்கு நேர் மோதி விபத்து.

பசறை பதுளை பிரதான வீதியில் 10 ம் கட்டைப் பகுதியில் முச்சக்கர வண்டி ஒன்றும் பேருந்து ஒன்றும் நேருக்கு நேர் மோதியுள்ளது.

பசறையிலிருந்து கிரிமடுதன்ன பகுதிக்கு சென்று கொண்டிருந்த முச்சக்கர வண்டியும் பிபிலேகமயில் இருந்து பசறை நோக்கி வந்து கொண்டிருந்த தனியார் பேருந்து ஒன்றும் 10 ம் கட்டைப் பகுதியில் வைத்து நேருக்கு நேர் மோதியதில் முச்சக்கர வண்டியில் பயணித்த ஐவர் பலத்த காயங்களுக்கு உள்ளாகி பசறை வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டு பின்னர் மேலதிக சிகிச்சைக்காக பதுளை வைத்தியசாலைக்கு அனுப்பி வைக்கப்பட்டுள்ளனர்.

காயமடைந்தவர்களில் சிறுவன் ஒருவர் முச்சக்கரவண்டி சாரதி உட்பட முச்சக்கர வண்டியில் பயணித்த ஐவருமே காயமடைந்து வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.

மேலதிக விசாரணைகளை பசறை பொலிஸார் மேற்கொண்டு வருகின்றனர்.

ராமு தனராஜா

Related Articles

Back to top button