செய்திகள்

பசறை பிரதேசத்திற்குட்பட்ட கோணக்கலை தோட்ட பிளார்னிவத்த பிரிவில்  92 குடும்பங்கள் தனிமைப்படுத்தப்பட்டுள்ளனர்..

பசறை பிரதேசத்திற்குட்பட்ட கோணக்கலை தோட்ட பிளார்னிவத்த பிரிவில் 
92 குடும்பங்கள்
தனிமைப்படுத்தப்பட்டுள்ளனர்.
கடந்த நாட்களில் குறித்த தோட்டத்தில்  73 நபர்களிடத்தில்
மேற்கொள்ளப்பட்ட பி.சி.ஆர் மாதிரி பரிசோதனை வெளியீட்டில் 41 கொரோனா தொற்றாளர்கள் உறுதிப்படுத்தப்பட்டுள்ளனர்.
இதன்காரணமாக பொதுமக்கள் சுகாதார பாதுகாப்பு கருதி
இன்று (16/07) பசறை பொது சுகாதார பரிசோதகர்கள் மற்றும் பசறை பொலிஸார் இணைந்து குறித்த பகுதியை 
உடன் அமுலாகும் வகையில்
தனிமைப்படுத்தப்பட்ட பகுதியாக ஒலிபெருக்கி மூலம் அறிவிப்பை விடுத்தனர்.
பசறை பிரதேசத்தில் கடந்த சில நாட்களாக தொற்றாளர்களின் எண்ணிக்கை அதிகரித்து வருகின்றமையால் பொதுமக்கள் சுகாதார நடைமுறைகளை பேணுமாறு அறிவுறுத்தப்பட்டுள்ளனர்.
நடராஜா மலர்வேந்தன்

Related Articles

Back to top button