
பசறை பிரதேசத்தில் நேற்று (25/01) திங்கட்கிழமை மேலும் நால்வருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டது.
கடந்த 18 ஆம் திகதி பசறை நகர பாடசாலையொன்றில் தொற்றுக்குள்ளான இரண்டு மாணவர்களுடன் தொடர்புகளைப் பேணியவர்களுக்கு மேற்கொள்ளப்பட்ட பி.சி. ஆர் மாதிரி பரிசோதனையின் அடிப்படையில் இரண்டு பாடசாலை மாணவர்களுக்கும் கொழும்பிலிருந்து வருகை தந்து தனிமைப்படுத்தப்பட்ட கோணக்கலை மற்றும் உடகம பகுதிகளைச் சேர்ந்த இருவருக்கும் தொற்றுறுதி செய்யப்பட்டுள்ளதாக பசறை பிரதேச பொது சுகாதார பரிசோதகர் தெரிவித்தார்.
நேற்று தொற்றுறுதி செய்யப்பட்ட நால்வரையும் காஹல்ல தனிமைப்படுத்தல் சிகிச்சை மத்திய நிலையத்திற்கு அனுப்பிவைக்கப்பட்டுள்ளனர்.
அத்தோடு தொற்றாளர்களோடு நெருங்கிய உறவை பேணியவர்கள் மற்றும் தனிமைப்படுத்தப்பட்டிருந்த 200 இற்கு அதிகமானோரின் பி.சி.ஆர் மாதிரிகள் சோதனைக்கு பெறப்பட்டுள்ளதாகவும் சுகாதார பரிசோதகர்கள் தெரிவித்துள்ளனர்.
இதுவரை பசறை பிரதேசத்தில் 18 பாடசாலை மாணவர்கள் உள்ளிட்ட நாற்பதிற்கு அதிகமானோர் கொரோனா தொற்றுக்குள்ளாகியுள்ளமை பதிவுசெய்யப்பட்டுள்ளது.
நடராஜா மலர்வேந்தன்