செய்திகள்மலையகம்

பசறை பிரதேசத்தில் 19 நபர்களுக்கு கொரோனா தொற்றுறுதி!

பசறை பிரதேசத்தில் 19 நபர்களுக்கு கொரோனா தொற்றுறுதி
கடந்த சில நாட்களுக்கு முன்னர் மேற்கொள்ளப்பட்ட பி.சி.ஆர் பரிசோதனை அறிக்கை பெறுபேறுகளின்படி இன்று (15/07) மேலும் 19 கொரோனா தொற்றாளர்கள் இனங்காணப்பட்டுள்ளனர்.

இவர்களில் 17 பேர் கோணக்கலை பிளார்னிவத்த தோட்டத்தைச் சேர்ந்தவர்களென பிரதேச பொது சுகாதார மேற்பார்வை பரிசோதகர் ஜெயக்குமார் தெரிவித்தார்.

இதுவரை பிளார்னிவத்த தோட்டத்தில் 32 தொற்றாளர்கள் இனங்காணப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது. தொற்றுறுதியானவர்களை தனிமைப்படுத்தல் சிகிச்சை நிலையங்களுக்கு அனுப்பி வைப்பதற்கான நடவடிக்கைகளை பொதுசுகாதார பரிசோதகர்கள் மேற்கொண்டு வருகின்றனர்.

நடராஜா மலர்வேந்தன்

Related Articles

Back to top button