...
செய்திகள்

பசறை பிரதேச சபையில் 2022 ம் ஆண்டுக்கான வரவு செலவு திட்டம்  11  வாக்குகளால் வெற்றி

பசறை பிரதேச சபையில் 2022 ம் ஆண்டுக்கான வரவு செலவு திட்டம்  இன்று  (02/11)      11  வாக்குகளால் வெற்றி பெற்றுள்ளது. 
பசறை பிரதேச சபையின் விசேட  சபை அமர்வு இன்று காலை 9.30 மணியளவில் பசறை பிரதேச சபையின் தவிசாளர் R.M. ஞானதிலக தலைமையில் ஆரம்பமானது. இதன்போது சபையின் உறுப்பினர்கள் 23 பேரில் இன்றைய விசேட சபை அமர்வுக்கு சுமார் 15 பேர்  மாத்திரம் சமூகமளித்திருந்தனர்.
 இதன்போது சபையின் தவிசாளர் R.M. ஞானதிலக சபை உறுப்பினர்களிடம் 2022 ற்கான வரவு செலவு திட்ட அறிக்கையினை சமர்ப்பித்தார்.
 இதன்போது 11 உறுப்பினர்கள் ஆதரவாகவும் 4 உறுப்பினர்கள் எதிராகவும் வாக்களித்தனர்.
சிறிலங்கா பொது ஜன பெரமுனவின் 03 உறுப்பினர்களும் JVP யின் ஒரு உறுப்பினருமாக மொத்தமாக 04   பேர் எதிராக வாக்களித்தனர் ‌. இலங்கை தொழிலாளர் காங்கிரஸின் உறுப்பினர்கள் மூவர் ஆதரவாக வாக்களித்ததுடன் 08 உறுப்பினர்கள் சபையில் சமூகமளிக்கவில்லை என்பதும் குறிப்பிடத்தக்கது.
ராமு  தனராஜா

Related Articles

Back to top button


Thubinail image
Screen