செய்திகள்

பசறை பிரதேச மீதும்பிட்டியை சேர்ந்த ஒருவருக்கு கொரோனா தொற்று…

பசறை பிரதேச மீதும்பிட்டிய பகுதியை சேர்ந்த 26 வயது நபருக்கு (20/01/2021)
கொரோனா தொற்று உறுதிசெய்யப்பட்டதாக பொது சுகாதார பரிசோதகர் வீ.ராஜதுரை தெரிவித்தார்.

கடந்த 17 ஆம் திகதி மேற்கொள்ளப்பட்ட பி.சி.ஆர் மாதிரி பரிசோதனை அறிக்கையின்படி குறித்த நபருக்கு தொற்றுறுதி செய்யப்பட்டதாகவும் இவர் கொழும்பில் தொழில் புரிந்து,
சொந்த ஊருக்கு பொங்கல் விடுமுறையில் வந்தவரென்பது குறிப்பிடத்தக்கது.
குறித்த தொற்றாளருடன் நெருங்கிய தொடர்பை பேணியவர்கள் தனிமைப்படுத்தப்பட்டுள்ளனர்.

இதன்படி பசறை பிரதேசத்தில் கொரோனா தொற்றாளர்களின் எண்ணிக்கை 32 ஆக பதிவுசெய்யப்பட்டுள்ளது.

நடராஜா மலர்வேந்தன்

Related Articles

Back to top button
WP2Social Auto Publish Powered By : XYZScripts.com