செய்திகள்

பசறை பிளானிவத்தைப் பகுதியில் மேலும் 6 தொற்றாளர்கள்…

பசறை பிளானிவத்தைப் பகுதியில் இன்றைய தினம் (27/07) மேலும் 6 தொற்றாளர்கள் அடையாளம். 
பசறை சுகாதார பிரிவிற்கு உட்பட்ட கோணக்கலை பிளானிவத்தைப் பகுதியில் கடந்த 24 ம் திகதி 55 நபர்களிடம்  PCR  பரிசோதனைகள் மேற்கொள்ளப்பட்டன. அதில் சில பெறுபேறுகள் இன்றைய தினம் கிடைக்கப்பெற்றுள்ளன. அதில் 6 தொற்றாளர்கள் அடையாளம் காணப்பட்டுள்ளதோடு பிளானிவத்தைப் பகுதியில் மொத்த தொற்றாளர்களின் எண்ணிக்கை 72 ஆக அதிகரித்துள்ளது. 
தொற்றாளர்களை  காகொல்ல தனிமைப்படுத்தல் முகாமுக்கும் மற்றும் பதுளை தனிமைப்படுத்தல் முகாமுக்கும் அழைத்து செல்வதற்கான நடவடிக்கைகளை மேற்கொண்டு வருவதாகவும் மேலும் சில PCR பரிசோதனைகள் மேற்கொள்ளப்பட உள்ளதாகவும் அத்துடன் பசறை சுகாதார பிரிவில் இதுவரையிலும் மொத்த தொற்றாளர்களின் எண்ணிக்கை 400 ஐ அண்மித்துள்ளதாகவும் இதுவரையிலும் 9 பேர்  மரணித்துள்ளதாகவும் சுகாதார பரிசோதகர்களின் மேற்பார்வையாளர் தெரிவித்தார். 
அத்துடன் கோணக்கலை பிளானிவத்தைப் பகுதி  கடந்த 16 ம் திகதியிலிருந்து தனிமைப்படுத்தப்ப
ட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.

Related Articles

Back to top button