செய்திகள்

பசறை – மீதும்பிடிய பகுதியில் கசிப்பு உற்பத்தியில் ஈடுபட்ட ஒருவர் கைது.

பசறை பொலிஸ் பிரிவிற்கு உட்பட்ட மீதும்பிடிய பி பிரிவில் கசிப்பு உற்பத்தியில் ஈடுபட்ட 50 வயதுடைய நபர் ஒருவர் பசறை பொலிஸாரினால் கைது செய்யப்பட்டுள்ளார்.

பசறை பொலிஸ் நிலைய பொறுப்பதிகாரி பாலித செனவிரத்ன அவர்களுக்கு கிடைக்கப்பெற்ற இரகசிய தகவலை அடுத்து பொருப்பதிகாரியின் ஆலோசனையின் பேரில் சுனில் தலைமையிலான நிரஞ்சன் , பிரசன்ன , சமில் ஆகிய குழுவினர் மீதும்பிடி பி பிரிவிற்கு உடன் சென்று சுற்றிவளைப்பினை மேற்கொண்ட போது 180750 மில்லி லீட்டர் கோடாவும் கசிப்பு உற்பத்திக்கு பயன்படுத்தப்படும் உபகரணங்களும் கைப்பற்றப்பட்டதோடு 50 வயதுடைய நபர் ஒருவரும் கைது செய்யப்பட்டுள்ளார்.

அத்துடன் அதே பகுதியில் சட்ட விரோதமான முறையில் 750 மில்லி லீட்டர் கசிப்பு தன் கைவசம் வைத்திருந்த 40 வயதுடைய நபர் ஒருவர் கைது செய்யப்பட்டுள்ளார். இவர்கள் இருவரையும் நீதிவான் நீதிமன்றில் ஆஜர் படுத்துவதற்கான நடவடிக்கைகளை மேற்கொண்டுள்ளதாக பசறை பொலிஸார் தெரிவித்தனர்.

இச்சம்பவம் நேற்று (11/07) இடம்பெற்றுள்ளது.

ராமு தனராஜா

Related Articles

Back to top button