செய்திகள்பதுளை

பசறை – லுணுகலை முச்சக்கர வண்டி விபத்து ஏழு பேருக்கு காயம்.

பசறை – லுணுகலை பிரதான வீதி பதிமூன்றாம் கட்டைப் பகுதியில் முச்சக்கர வண்டியொன்று இன்று காலை 11.30 மணியளவில்
(26/12) வீதியில் தடம்புரண்டு விபத்துக்குள்ளாகியதில் முச்சக்கர வண்டியில் பயணித்த ஒரே குடும்பத்தைச் சேர்ந்த ஆறுபேரும் முச்சக்கர வண்டி ஓட்டுநர் அடங்களாக ஏழுபேர் காயங்களுக்குள்ளாகினர்.

காயமடைந்தவர்கள் தற்போது சிகிச்சைக்காக பசறை பொது வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.

இதில் ஒன்றரை வயதுடைய இரட்டை ஆண் குழந்தைகளும், மூன்று வயது சிறுமி ஒருவரும், இரண்டு ஆண்களும், இரண்டு பெண்களும் அடங்குகின்றனர்.

விபத்துக்கான காரணம் தொடர்பாக மேலதிக விசாரணைகளை பசறை பொலிஸார் மேற்கொண்டு வருகின்றனர்.

நடராஜா மலர்வேந்தன்

Related Articles

Back to top button
WP2Social Auto Publish Powered By : XYZScripts.com