...
செய்திகள்

பசறை வலய கல்வி பணிமணைக்குட்பட்ட, தெரிவு செய்யப்பட்ட பாடசாலைகளின் அபிவிருத்தி செயற்பாட்டு ஒன்றுகூடல்

ஐரோப்பிய அபிவிருத்திக்கான, ஒன்றிணைவு சமூக அபிவிருத்தி நிறுவகத்தின் ஏற்பாட்டில் பதுளை மாவட்டத்தில் பசறை வலய கல்வி பணிமணைக்குட்பட்ட தெரிவு செய்யப்பட்ட பதினெட்டு பாடசாலைகளின் அபிவிருத்தி செயற்பாட்டு திட்டத்தின் நிறைவையொட்டிய ஒன்றுகூடல் பதுளையில் இடம்பெற்றது.


கடந்த நான்கு ஆண்டுகளாக குறித்த பாடசாலைகளில் சுகாதாரம், போசனை, பாதுகாப்பு, குடிநீர் வசதி, சூழல் பாதுகாப்பு, கற்றல் அபிவிருத்தி உள்ளிட்ட பல்வேறு செற்றிட்டங்கள் முன்னெடுக்கப்பட்டமை குறிப்பிடத்தக்கது.

இதில் பசறை வலய கல்வி பணிப்பாளர் சேனாதீர ஜயசுந்தர, உதவி கல்வி பணிப்பாளர்கள் கே. மோகனேஸ்வரன்,
எஸ்.கவிதாஞ்சலி , செயற்றிட்ட பணிப்பாளர் தனராஜ் மற்றும் இணைப்பாளர்கள் பாடசாலை அதிபர்கள், ஆசிரியர்கள் என பலரும் கலந்துகொண்டனர்.

நடராஜா மலர்வேந்தன்

Related Articles

Back to top button


Thubinail image
Screen