...
செய்திகள்பதுளைமலையகம்

பசறை – நமுனுகுல பிரதான வீதியில் லொறியொன்று 150 அடி பள்ளத்தில் வீழ்ந்து விபத்து.

பசறை – நமுனுகுல பிரதான வீதி பதின்மூன்றாம் கட்டைப் பகுதியில் வீதியை விட்டு விலகி லொறி வாகனமொன்று சுமார் 150 அடி பள்ளத்தில் வீழ்ந்து விபத்துக்குள்ளாகியதில் லொறியின் சாரதி பலத்த காயங்களுடன் மயிரிழையில் உயிர் தப்பியுள்ளார்.

விபத்தில் படுகாயமடைந்த சாரதி சிகிச்சைக்காக பசறை பொது வைத்திய சாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.

இவ்விபத்து இன்று (22) இரவு 8.00 மணியளவில் இடம்பெற்றுள்ளது. விபத்து தொடர்பாக பசறை பொலிஸார் மேலதிக விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்.

– நடராஜா மலர்வேந்தன்

Related Articles

Back to top button


Thubinail image
Screen