பசுமலை தோட்ட தொழிலார்களின் வீடுகளை பறிக்க முயற்சி
ஹோல்ப்புரூக் பசுமலை பிரதேசத்தில் கடத்த 70 வருடங்களுக்கு மேல் தோட்ட தொழிலார்களாக குடியேறி வசிக்கும் 09 குடும்பத்தை சேர்ந்தவர்களை குறித்த இடத்தை விட்டு போகும் படி தோட்ட உரிமையாளர்களால் தினமும் கூறப்படுவதாக தெரிவிக்கப்படுகின்றது.
தாங்கள் வாழுகின்ற குடியிருப்புக்களை ஏதேனும் திருத்தங்கள் செய்தாலும் அவர்கள் அதை தடைசெய்வதாகவும் பாதிக்கப்பட்ட மக்கள் தரப்பிலிருந்து கூறப்படுகின்றது.
ஒரு தலைமுறையினர் குறிப்பிட்ட தோட்ட உரிமையாளர்களுக்கே உழைத்து கொடுத்திருக்கின்றார்கள், மேலும் அந்த 09 குடும்பங்களுக்கும் வரும் கடிதங்கள் ஏன் வாக்கு சீட்டுக்கள் கூட உரிமையாளர்களால் உரித்தானவர்களுக்கு வழங்கப்படுவதில்லை எனவும் விசனம் தெரிவிக்கின்றனர்.
மேலும் அரசாங்க வேலை வாய்ப்பு கடிதங்கள் போன்ற மிக முக்கியமான கடிதங்களையும் உரிமையாளர்களே வைத்துக்கொண்டு வழங்குவதில்லை என கவலை தெரிவிக்கின்றனர்.எனவே மலையக அரசியல் தலைமைகள் இது தொடர்பில் அவதானம் செலுத்த வேண்டுமென பாதிக்கப்பட்ட மக்கள் சார்பில் கோரிக்கைவிடுக்கப்பட்டுள்ளது.