செய்திகள்பதுளைமலையகம்

பண்டாரவளையில் ரயில் முன் பாய்ந்து பெண் தற்கொலை.

பண்டாரவளை பொலிஸ் பிரிவிற்குட்பட்ட கொலத்தன்ன (ஒத்தக்கடை) பகுதியிலுள்ள ரயில் கடவையின் அருகில் நின்று கொண்டிருந்த 48 வயதுடைய பெண்ணொருவர் பதுளையில் இருந்து கொழும்பு நோக்கி சென்று கொண்டிருந்த ரயிலின் முன் பாய்ந்து தற்கொலை செய்து கொண்டுள்ளார்.

இதன் போது குறித்த பெண்ணின் சடலம் பண்டாரவளை வைத்தியசாலையின் பிரேத அறையில் வைக்கப்பட்டுள்ளது.

இவர் பொல்காவெல்ல பகுதியைச் சேர்ந்தவர் என்றும் எதற்காக பண்டாரவளை பகுதிக்கு வந்திருந்தார் என்றும் பண்டாரவளை பொலிசார் விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்.

இச்சம்பவம் நேற்று இரவு (19/01) இடம்பெற்றுள்ளது.

ராமு தனராஜா

Related Articles

Back to top button