செய்திகள்மலையகம்

பண்டாரவளை வெல்லவாய பிரதான வீதியில் இன்று மாலை விபத்து!

எல்ல பொலிஸ் பிரிவுக்கு உட்பட்ட பண்டாரவளை வெல்லவாய பிரதான வீதியில் வெள்ளவாய நோக்கி பயணித்த மரக்கறி டிப்பர் ஒன்று எல்ல பகுதியில் வீதியை விட்டு விலகி சுமார் முப்பதடி பள்ளத்தில் விழுந்து விபத்துக்குள்ளானது.

சம்பவம் இடம்பெற்ற வேளையில் இரண்டு நபர்கள் பயணித்து உள்ளனர். இதன்போது உதவியாளர் காயங்கள் இன்றி மீட்கப்பட்ட வேலை டிப்பர் சாரதியை மீட்பதற்கான பணிகளை எல்ல போலீசார் மற்றும் பிரதேச மக்கள் இணைந்து சுமார் இரண்டு மணித்தியாலங்களுக்கு மேல் போராடினர்.

இரண்டு மணித்தியாலங்களுக்கு பின்னர் மீட்கப்பட்ட இருபத்தி ஒரு வயதான பண்டாரவளை பிரதேசத்தை சேர்ந்த டிப்பர் சாரதியை 1990 ஊடாக சிகிச்சைகளுக்காக பதுளை பொது வைத்தியசாலைக்கு கொண்டு செல்லப்பட்டனர்.

விபத்து குறித்த விசாரணைகளை எல்ல பொலிஸார் மேற்கொண்டு வருகின்றனர். விபத்து ஏற்பட்ட வேளையில் அதிகளவிலான மழைவீழ்ச்சி பதிவாகியிருக்கலாம் இவ்விபத்து ஏற்பட்டு இருக்கலாம் என பொலிசார் மேலும் சந்தேகிக்கின்றனர்.

Related Articles

Back to top button


Thubinail image
Screen