செய்திகள்

பணி பகிஷ்கரிப்பினால் முடங்கியிருந்த கல்வி நடவடிக்கைகள் நாளை ஆரம்பம்.

பணிபகிஷ்கரிப்பினால் முடங்கியிருந்த பல்கலைக்கழக நடவடிக்கைகளை மீள ஆரம்பிக்குமாறு பல்கலைக்கழக மானியங்கள் ஆணைக்குழு, உபவேந்தர்களுக்கு அறிவித்தல் விடுத்துள்ளது.

நாளையுடன் ஆரம்பமாகவுள்ள ஒரு வாரத்திற்குள் அனைத்து பல்கலைக்கழக நடவடிக்கைகளையும் மீள ஆரம்பிக்க முடியும் என பல்கலைக்கழக மானியங்கள் ஆணைக்குழு தெரிவித்துள்ளது.

இதன்பிரகாரம் பிற்போடப்பட்ட பரீட்சை மற்றும் விரிவுரைகளை, வழமையான நேர அட்டவணையின் பிரகாரம் நடத்த முடியும் என  பல்கலைக்கழக மானியங்கள் ஆணைக்குழு குறிப்பிட்டுள்ளது.

கல்வி சாரா ஊழியர்களின் பணிபகிஷ்கரிப்பினால் பாதிக்கப்பட்டிருந்த, பல்கலைக்கழகங்களுக்கு புதிய மாணவர்களை இணைத்துக் கொள்ளும் நடவடிக்கைகளும் நாளை முதல் ஆரம்பமாகவுள்ளன.

33 நாட்களாக முன்னெடுக்கப்பட்ட பல்கலைக்கழக கல்வி சாரா ஊழியர்களின் பணிபகிஷ்கரிப்பு கடந்த வெள்ளிக்கிழமை கைவிடப்பட்டிருந்தது.

ஊழியர்களின் சம்பள பிரச்சினையை ஒரு மாதத்திற்குள் தீர்ப்பதாக விடயத்திற்கு பொறுப்பான அமைச்சின் செயலாளர் வழங்கிய உறுதி மொழிக்கு அமைய பணிபகிஷ்கரிப்பு நிறைவுக்கு கொண்டு வரப்பட்டமை குறிப்பிடத்தக்கது.

Related Articles

Back to top button
image download