பணி பகிஸ்கரிப்பில் ஈடுபட்டுள்ள மலையக தொழிலாளர்கள்

மலையக பெருந்தோட்ட தொழிலாளர்களின் அடிப்படை சம்பளம் 1000 ரூபாவினை வலியுறுத்தி
மலையகம் முழுவதிலும் உள்ள தொழிலாளர்கள் பணி பகிஸ்கரிப்பில் ஈடுபட்டுள்ளனர்.
குறித்த பணிபகிஸ்கரிப்பு இன்று பொகவந்தலாவ பகுதியில் உள்ள 12தோட்ட பகுதிகளில் தொழிலாளர்களால் முன்னெடுக்கப்பட்டுள்ளது.
பொகவந்தலாவ – கெர்க்கஸ்வோல்ட் மத்திய பிரிவு தோட்டபகுதியில் இலங்கை தொழிலாளர் காங்கிரஸ் ஆதரவாளர்கள் தொழிலுக்கு செல்லாமல் பணிபகிஸ்கரிப்பில் ஈடுபட்டு வந்த போதிலும் தொழிலாளர் தேசிய சங்கத்தின் ஆதரவாளர்கள் வழமை போலவே பணியில் ஈடுபட்டனர்.
இதனால் பொகவந்தலாவ கெர்க்கஸ்வோல்ட் தோட்ட தொழிற்சாலை முன்பாக இரண்டு தரப்பினருக்கும் இடையில் அமைதியின்மை ஏற்பட்டுள்ளது.
அத்துடன், தொழிலாளர் தேசிய சங்க ஆதரவாளர்களால் பறிக்கபடும் தேயிலை கொழுந்தினை தொழிற்சாலைக்குள் தோட்ட நிர்வாகம் அனுமதிக்க கூடாது என கோரி இலங்கை தொழிலாளர் காங்ரசின் ஆதரவாளர்கள் தேயிலை தொழிற்சாலையின் முன்பு எதிர்ப்பினை வெளிபடுத்திய போது தோட்ட நிர்வாகத்தால் பலத்த பொலிஸ் பாதுகாப்புபோடு தொழிற்சாலையின் பிரதான
கதவு மூடபட்டது.
இதே வேளை தாங்கள் பறிக்கும் கொழுந்தினை தொழிற்சாலைக்குள் அனுமதிக்கபட வேண்டும் என கூறி தொழிலாளர் தேசிய சங்கத்தின் ஆதரவாளர்கள் எதிர்ப்பினை வெளியிட தொழிற்சாலையின் கதவு மீண்டும் திறக்கபட்டது என குறிப்பிடப்படுகின்றது.