செய்திகள்பதுளைமலையகம்

பண்டாரவளை எல்லவெல தோட்டத்தில் ஏற்பட்ட முறுகல் நிலைமை தற்போது கட்டுப்பாட்டுக்குள்…

பண்டாரவளை எல்லவெல தோட்டத்தில் ஏற்பட்ட முறுகல் நிலைமை தற்போது கட்டுப்பாட்டுக்குள் கொண்டுவரப்பட்டுள்ளதாக விசாரணைகளை மேற்கொள்ளும் அட்டாம்பிட்டிய பொலிஸார் தெரிவித்தனர்.

தேர்களும், பொலிஸாரும் இணைந்து பிரச்சினையில் ஈடுபட்ட இரு இளைஞர் குழுக்களையும் சமாதானப்படுத்தி பிரச்சினையை முடிவுக்கு கொண்டு வந்துள்ளனர்.

எல்லவெல தோட்ட இளைஞர்கள் சிலரை வெபசாவெல எனும் இடத்தில் உள்ள இளைஞர்கள் சிலர் நேற்று தாக்கியதாக தெரிவிக்கப்படுகின்றது.

இந்த நிலையில் எல்லவெல தோட்ட இளைஞர் ஒருவர் காயமடைந்து தொடர்ந்தும் சிகிச்சை பெற்று வருவதாக எட்டாம்பிட்டியதள வைத்தியசாலையின் பேச்சாளர் ஒருவர் தெரிவித்தார்.

எவ்வாறாயினும் சம்பவத்துடன் தொடர்புடைய இளைஞர்களை தாக்கியதாக தெரிவிக்கப்படும் மூவர் கைது செய்யப்பட்டு அவர்கள் பிணையில் விடுவிக்ககப்பட்டுள்ளதாக அட்டாம்பிட்டிய பொலிஸார் தெரிவித்தனர்.

இந்த நிலையில் இன்று வெபசாவெல பகுதி தேரர்களும், அட்டாம்பிட்டிய பொலிஸாரும் தலையிட்டு பிரச்சினையை முடிவுக்கு கொண்டு வந்துள்ளனர்.

Related Articles

Back to top button