செய்திகள்பதுளைமலையகம்

பண்டாரவளை நெளுவை தோட்டத்தில் முருகன் ஆலயம் உடைத்து திருட்டு. 

எட்டாம்பிட்டிய  பொலிஸ்  பிரிவிற்கு  உட்பட்ட பண்டாரவளை நெளுவை தோட்ட ஸ்ரீ சிவசுப்பிரமணியர் ஆலயம் இவ் வருடத்தில் இரண்டாவது முறையாக   உடைக்கப்பட்டு  திருட்டபட்டுள்ளது.

இதன்போது ஆலய விக்கிரகத்தின் தாலி, ஆலயத்தின் திருவிழாவில் சேர்க்கப்பட்ட  பணம், மற்றும் உண்டியல் பணம் என்பன  திருடப்பட்டுள்ளன.

இவ்வருடம்  இந்த ஆலயம் இரண்டாவது முறையாக உடைக்கப்பட்டு திருட்டு  சம்பவம்  இடம்பெற்றுள்ளமை குறிப்பிடத்தக்கது.

எனினும் கடந்த முறை இடம்பெற்ற    திருட்டு சம்பவம்  தொடர்பாக   இதுவரையில் எவரையும்  கைதுச்செய்யவில்லை.

இன்று இடம்பெற்ற இந்த திருட்டு சம்பவம் தொடர்பாக  எட்டாம்பிட்டிய பொலிஸார் மேலதிக விசாரணைகள் முன்னெடுத்து வருகின்றனர்.

ராமு தனராஜா

Related Articles

Back to top button