செய்திகள்

பண்டிகைக் காலத்தை முன்னிட்டு விசேட ரயிலை சேவை..?

பண்டிகைக் காலத்தை முன்னிட்டு இன்று முதல் கண்டிக்கு மேலுமொரு ரயிலை சேவையில் இணைத்துக் கொள்ள புகையிரத திணைக்களம் தீர்மானித்துள்ளது.

கொழும்பு கோட்டையிலிருந்து காலை 9 மணிக்கு பயணத்தை ஆரம்பிக்கவுள்ள புகையிரதம், முற்பகல் 11.30 மணிக்கு கண்டியை சென்றடையும் என புகையிரத பொது முகாமையாளர் அலுவலகம் தெரிவித்துள்ளது.

இந்த ரயில் கம்பஹா மற்றும் பேராதனை ரயில் நிலையங்களில் மாத்திரம் தரித்து நிற்கும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

குறித்த சொகுசு ரயில் கண்டியிலிருந்து மாலை 4.55 ற்கு புறப்படுவதுடன், இரவு 7.30 அளவில் கொழும்பை வந்தடையவுள்ளது.

எதிர்வரும் ஜனவரி மாதம் 2 ஆம் திகதி வரை விசேட ரயில் சேவையில் ஈடுபடவுள்ளது.

இதேவேளை, எதிர்வரும் 20, 21 மற்றும் 22 ஆம் திகதிகளில் கொழும்பிலிருந்து பதுளைக்கு விசேட ரயிலொன்று சேவையில் ஈடுபடவுள்ளதாக ரயில்வே திணைக்களம் அறிவித்துள்ளது.

இந்த புகையிரதம் பேராதனையூடாக பதுளைக்கு பயணிக்கவுள்ளதாக புகையிரத திணைக்களம் மேலும் தெரிவித்துள்ளது.

Related Articles

Back to top button