நிகழ்வுகள்பதுளைமலையகம்

பதுளையில் இரு சமூக அமைப்புக்களின் ஏற்பாட்டில் இடம்பெற்ற பொங்கல் விழா.

மலையகத்தின் உரிமைக் குரல் மற்றும் மலையக விழிகள் உதவும் கரங்கள் ஆகிய அமைப்புகளினால் ஏற்பாடு செய்யப்பட்டுள்ள மாபெரும் பொங்கல் விழா நேற்றைய தினம் (17/01) பதுளை சாரணியா தோட்டம் கொல்லுமண்டி டிவிஷனில் ஸ்ரீசிவசுப்ரமணியர் ஆலய வளாகத்தில் இடம்பெற்றது.

இந்நிகழ்வானது காலை 10 மணியளவில் மங்கள விளக்கேற்றலுடன் ஆரம்பித்து புத்தரிசியில் பொங்கல் பொங்கி விழா இனிதே ஆரம்பமானது.

அதனைத் தொடர்ந்து அனைத்து வயதினருக்குமான நமது தமிழர் பாரம்பரியத்தை வெளிப்படுத்தும் விளையாட்டுப் போட்டிகள் மற்றும் கலை நிகழ்வுகள் என்பன இடம்பெற்றது.

சிலம்பம் சுத்துதல், மரதன் ஓட்டம், பலூன் உடைத்தல், வண்டி ஓட்டம், முட்டி உடைத்தல், விநோத உடை போட்டி, கயிறிழுத்தல், தேசிக்காய் ஓட்டம், தோங்காய் துருவுதல் என இன்னும் பல விளையாட்டுப் போட்டிகள் ஆண்கள், பெண்கள் என இருபாலாருக்கும் இடம்பெற்றது.

இப்போட்டிகளில் சிலம்பம் சுத்துதல் மிகச்சிறப்பாக இடம்பெற்றிருந்ததுடன் அதிகமானோரின் கவனத்தை ஈர்த்த போட்டியாகவும் அமைந்திருந்தது.
அதனைத் தொடர்ந்து மரதன் ஓட்டமும் சிறப்பாக அமைந்திருந்தது. ஆண்களுக்காக 1000 மீட்டரும் பெண்களுக்காக 500 மீட்டரும் என மரதன் ஓட்டம் நிகழ்ச்சி அமைந்திருந்தது.
இவ்வாறே ஏனைய போட்டிகளும் ஒன்றுக்கொன்று சலைக்காத வண்ணம் விறுவிறுப்புடன் நடைபெற்றது.

அதனைத் தொடர்ந்து போட்டிகளில் வெற்றி பெற்றோருக்கு பரிசில்கள் வழங்கி வைக்கப்பட்டது.
இந்நிகழ்வில் மற்றுமொரு சிறப்பம்சமாக அப்பிரதேசத்தில் வசிக்கும் முதியவர்களுக்கு வேட்டி, சேலைகள் நினைவுப்பரிசாக வழங்கி வைக்கப்பட்டது. இப்பொதிகளை சாரணியா தோட்ட முகாமையாளர் வழங்கி வைத்தார்.

மிகவும் சிறப்பான முறையில் மலையகத்தின் உரிமைக்குரல் மற்றும் மலையக விழிகள் இணைந்து நடாத்திய இப்பொங்கல் விழாவுக்கு மலையக மக்களின் உரிமைக்குரலாய் விளங்கும் மலையகம்.lk மற்றும் மலையகம் FM ஊடக அனுசரணை வழங்கி, Facebook Live மூலமாக நேரலை அஞ்சல் செய்திருந்தமை குறிப்பிடத்தக்கது.

https://www.facebook.com/malaiyagamlk/videos/257217186540413/
https://www.facebook.com/malaiyagamlk/videos/1137539743449466/
https://www.facebook.com/malaiyagamlk/videos/2988553468051647/
https://www.facebook.com/malaiyagamlk/videos/887865211888408/
https://www.facebook.com/malaiyagamlk/videos/301404388616896/

Related Articles

Back to top button