அரசியல்செய்திகள்

பதவி விலகிய இராஜாங்க அமைச்சர்கள் மீண்டும் தமது பதவியை பெற்றுக் கொண்டனர்.

பதவி விலகிய முஸ்லிம் நாடாளுமன்ற உறுப்பினர்களான பைசல் காசிம் மற்றும் அலி சாஹிர் மௌலானா ஆகியோர் மீண்டும் இராஜாங்க அமைச்சர்களாக பதவியேற்றுள்ளனர்.

ஜனாதிபதி மைத்ரிபால சிறிசேனவின் முன்னிலையில் இன்று இவர்கள் பதவியேற்றதாக ஜனாதிபதி ஊடகப்பிரிவு தெரிவித்துள்ளது.

இதற்கமைய நாடாளுமன்ற உறுப்பினரான பைசல் காசிம் சுகாதாரம் போசாக்கு மற்றும் சுதேச மருத்து இராஜாங்க அமைச்சராக பதவியேற்றுள்ளார்.

நாடாளுமன்ற உறுப்பினரான  அலி சாஹிர் மௌலானா ஆரம்ப கைத்தொழில் மற்றும் சமூக வலுவூட்டல் இராஜாங்க அமைச்சராக பதவியேற்றுள்ளார்.

Related Articles

Back to top button