...
செய்திகள்

பதிவாளர் பதவியில் இருந்து தன்னை நீக்க முடியாது, பீடைக்கொல்லி பதிவாளர் சுமித்

பீடைக்கொல்லி பதிவாளர் பதவியில் இருந்து தன்னை நீக்க முடியாது என ஜே.ஏ.சுமித் தெரிவித்துள்ளார்.

பீடைக்கொல்லி பதிவாளர் பதவியிலிருந்து கலாநிதி ஜே.ஏ.சுமித் நீக்கப்பட்டுள்ளதாக அமைச்சர் மஹிந்தானந்த அளுத்கமகே தெரிவித்திருந்தார்.

அத்துடன், க்ளைபோசேட் உள்ளிட்ட 5 பீடைகொல்லிகளை பயன்படுத்தல் மற்றும் விற்பனையைத் தடை செய்யும் வர்த்தமானியை ரத்து செய்யும் வகையில் நேற்றிரவு அதிவிசேட வர்த்தமானியை வௌியிட்டமை தொடர்பில் தகுந்த நடவடிக்கை எடுக்கப்படும் எனவும் அவர் மேலும் தெரிவித்தார்.

இந்த நிலையில் உரிய சட்ட அனுமதியை பெற்றே மேற்படி வர்த்தமானியை வௌியிட்டதாகவும், அதனால் அமைச்சரால் தன்னை பதவியிலிருந்து நீக்க முடியாது எனவும் பீடைக்கொல்லி பதிவாளர் ஜே.ஏ.சுமித் தெரிவித்துள்ளார்.

Related Articles

Back to top button


Thubinail image
Screen