செய்திகள்பதுளைமலையகம்

பதுளைக்கு தடுப்பூசி.!

பதுளை மாவட்டத்தின் ஹப்புத்தளை, எல்ல, பண்டாரவெல போன்ற பிரேதேசங்களில் நாளைய தினம் கொவிட் 19 தடுப்பூசி ஏற்றும் பணிகள் முன்னெடுக்கப்படவுள்ளதாக பெருந்தோட்டங்களுக்கான பிரதமரின் ஒருங்கிணைப்புச் செயலாளரும் இலங்கைத் தொழிலாளர் காங்கிரஸின் உப தலைவருமான செந்தில் தொண்டமான் தெரிவித்துள்ளார்.

அத்துடன், கிளெனோர், கல்கந்த, தொட்டலாகலை, பிரிட்டட்முல, தம்பெதெனயில், காகலை, ஹப்புத்தளை, எல்ல – செல்ஸி, நியூபேர்க், கவுஸா, நமுனுகலை, நாவெல கிழக்கு, நாவெல மேற்கு, பங்கெட்டிய போன்ற தோட்டப் பகுதிகளிலும், இந்தத் தடுப்பூசிகள் ஏற்றல் பணிகள் முன்னெடுக்கப்படவுள்ளன.

அதற்கமைய முதற்கட்டமாகக் கிடைத்துள்ள 50 ஆயிரம் கொரோனா தடுப்பூசிகளை பதுளை மக்களுக்கு நாளை முதல் ஏற்றும் பணிகள் முன்னெடு்க்கப்படவுள்ளன.

Related Articles

Back to top button
WP2Social Auto Publish Powered By : XYZScripts.com