மலையகம்

பதுளையில் காரொன்று சுமார் 140 அடி பள்ளத்தில் விழுந்து விபத்து: 3பேர் கவலைக்கிடம்

பதுளை – பண்டாரவளை வீதி, தெமோதர 10ஆம் மைல்கல் பகுதியில், காரொன்று சுமார் 140 அடி பள்ளத்தில் விழுந்து விபத்துக்குள்ளாகியுள்ளது.

குறித்த சம்பவத்தில் 3பேர் படுகாயமடைந்துள்ளனர் என பதுளை பொலிஸார் தெரிவித்துள்ளனர்.

மேலும், விபத்தில் காயமடைந்தவர்கள் கவலைக்கிடமாக இருப்பதாக வைத்தியசாலை தகவல்கள் குறிப்பிடுகின்றன.

இதேவேளை, சம்பவம் குறித்து மேலதிக விசாரணைகளை பொலிஸார் மேற்கொண்டுள்ளனர்.

Related Articles

Leave a Reply

Your email address will not be published.

Back to top button
WP2Social Auto Publish Powered By : XYZScripts.com