செய்திகள்

பதுளையில் துஷ்பிரயோக சம்பவம் – சந்தேகநபர் சரணடைந்தார் .

பதுளை  ஹாலிஎல பகுதியிலுள்ள முஸ்லிம் பாடசாலையொன்றில் 11 மாணவர்களை துஷ்பிரயோகத்திற்கு உட்படுத்தியதாக கூறப்படும் சம்பவம் தொடர்பில் அந்த பாடசாலையின் ஆசிரியர் பதுளை பொலிஸ் நிலையத்தில் சரணடைந்துள்ளார்.

இந்த சந்தேகநபர் இன்று சரணடைந்ததாக பொலிஸார் தெரிவித்தனர்.

இந்த பாடசாலையில் கல்வி கற்கும் ஐந்து மாணவர்களை குறித்த ஆசிரியர் துஷ்பிரயோகத்திற்கு உட்படுத்தியுள்ளதாக பதுளை பொலிஸ் நிலையத்திற்கு முறைப்பாடொன்று பதிவு செய்யப்பட்டுள்ளது.

44 வயதான சந்தேகநபர் ஒருவரே பொலிஸ் நிலையத்தில் சரணடைந்துள்ளார்.

சந்தேகநபர் நாளைய தினம் பதுளை நீதவான் முன்னிலையில் ஆஜர்ப்படுத்தவுள்ளார் .

பதுளை பொலிஸார் சம்பவம் தொடர்பில் மேலதிக விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர் .

Related Articles

Back to top button
image download