செய்திகள்பதுளைமலையகம்

பதுளையில் பாடசாலை மாணவர்களை இலக்குவைத்து மாவா போதைப்பொருள் விற்பனை; ஒருவர் கைது!

பதுளை நகரில் கடந்த சில நாள்களாக பாடசாலை மாணவர்களுக்கு (மாவா) என அழைக்கப்படும் ஒருவகை போதைப்பொருளை விற்பனைச் செய்த.

பதுளை ஹாலி எல பகுதியைச் சேர்ந்த 42 வயதுடைய நபர் பதுளை பிரதான பஸ் நிலையத்தில் இன்று கைது செய்யப்பட்டுள்ளார்.

பதுளை விசேட பொலிஸ் பிரிவிற்கு கிடைத்த இரகசிய தகவளையடுத்து பதுளையில் குற்றப்புலனாய்வு பிரிவினருடன் இணைந்து நடத்திய சுற்றிவளைப்பில் சந்தேக நபர் கைது செய்யப்பட்டுள்ளார்.

இவரிடம் இருந்து 20 மாவா போதைப்பொருள் பக்கட்டுகள் பொலிஸாரினால் கைபற்றப்பட்டுள்ளதாக பதுளை பொலிஸார் தெரிவித்தனர்.

சந்தேக நபரை இன்று பதுளை நீதவான் நிலையத்தில் ஆஜர் படுத்த நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.

இவ்விடயம் தொடர்பான மேலதிக விசாரணையை பதுளை பொலிஸார் முன்னெடுத்து வருகின்றனர்.

ராமு தனராஜா

Related Articles

Back to top button