செய்திகள்பதுளைமலையகம்

பதுளையில் மழைக்குருவி கூடுகளை சட்ட விரோதமான முறையில் கடத்த முற்பட்ட இருவர் கைது.

பதுளை பொலிஸ் பிரிவிற்கு உட்பட்ட பதுளப்பிட்டி பகுதியைச் சேர்த்த (42) மற்றும் (47) வயதுடைய இரண்டு சந்தேக நபர்களே கைது செய்யப்பட்டுள்ளனர்.

இவர்கள் இருவரிடமும் இருந்து மழைக்குருவி கூடுகள் பதுளை பொலிஸ் பிரிவினர் கைப்பற்றியதாக தெரிவிக்கப்படுகிறது.

பதுளை விசேட பொலிஸ் பிரிவிற்கு கிடைத்த இரகசிய தகவலை அடிப்படைகக் கொண்டு சந்தேக நபர்களை சோதனை நடத்திய வேளையில் இவர்கள் இருவரிடமும் சுட்சுமமான முறையில் கடத்தப்பட்ட மழைக்குருவி கூடுகள் கைப்பற்றப்பட்டுள்ளது.

சந்தேக நபர்கள் இடையில் நடத்தபட விசாரணையில் போது விற்பனை செய்வதற்காக இந்த மழைக்குருவி கூடுகள் கடத்தபட்டுள்ளமை தெரியவந்துள்ளது.

கைது செய்யப்பட்ட இரண்டு சந்தேக நபர்கள் பதுளையில் நீதிமன்றத்தில் ஆஜர் படுத்த நடவடிக்கை முன்னேடுக்கபடுகிறதாக பதுளை பொலிஸ்யின் உயர் அதிகாரி ஒருவர் தெரிவித்தார்.

ராமு தனராஜா

Related Articles

Back to top button