மலையகம்

பதுளை அதிபர் அச்சுறுத்தல் சம்பவத்துக்கு ஹட்டனில் பாரிய ஆர்ப்பாட்டம் ?

 

மாபெரும் கண்டன ஆர்ப்பாட்டம்
பதுளை தமிழ் அதிபரை அச்சுறுத்திய முதலமைச்சரையு ம் அதிகாரிகளையும் உடன் பதவி நீக்கு!-

புதுளை தமிழ் மகளிர் வித்தியாலய அதிபர் பவானி ரகுநாதனை தை மாதம் 3ம் திகதி ஊவா மாகாண கல்வி அமைச்சின் செயலாளர் சந்திய அம்பன்வெல மூலம் ஊவா மாகாண முதலமைச்சர் சாமர சம்பத் தசநாயக்க தன்னுடைய இல்லத்திற்கு அழைப்பித்துள்ளார். அங்கு பாடசாலையில் ஒரு மாணவரை அனுமதிக்காமைக்காக அதிபரை பலவந்தமாக முழங்காலில் மண்டியிட வைத்து மன்னிப்புக்கோரச் செய்துள்ளார்.
இச்சம்பவம் ஊடகங்களில் வெளியாகி எதிர்ப்புகள் கிளம்பியதால் கடந்த 9ம் திகதி சம்பந்தப்பட்ட அதிபரை மாகாண கல்வி அமைச்சுக்கு அழைப்பித்து அமைச்சின் செயலாளர் ஊவா மாகாண கல்விப் பணிப்பாளர் பதுளை வலயக் கல்விப் பணிப்பாளர் ஆகியோர் மறுப்பு அறிக்கையொன்றை அதிபரை வற்புறுத்தி ஊடகங்களுக்கு வழங்கச் செய்துள்ளனர்.
இவற்றையும் மீறி தொழிற்சங்கங்கள், பெண்கள் அமைப்புகள் உட்பட அரச சார்பற்ற நிறுவனங்கள் மூலம் உண்மைச் செய்திகள் ஊடகங்களில் வெளியானதால் ஊவா மாகாண கல்வி அமைச்சின் செயலாளரும் வேறு அதிகாரிகளும் மீண்டும் பதுளை தமிழ் மகளிர் வித்தியாலத்திற்குச் சென்று அதிபரை அச்சுறுத்தியு ள்ளனர். இத்தகவலை அறிந்த பதுளை மாவட்ட பாராளுமன்ற உறுப்பினர் ஒருவர் ஊடகவியலாளர்களுடன் அங்கு சென்றதால் கல்வி அமைச்சின் செயலாளர் உட்பட அதிகாரிகள் பின்வாங்கினர்.
ஊவா மாகாண முதலமைச்சரினதும், ஊவா மாகாண கல்வி அமைச்சு அதிகாரிகளினதும் இச்செயல்கள் முழு ஆசிரியர் சமூகத்தினையும் முழு அதிபர்கள் சமூகத்தினையும் முழு கல்வி சமூகத்தினையும் மட்டுமல்ல முழு பெண்கள் சமூகத்தையும் அவமானப்படுத்துபவையாகும். இச்செயல்களை ஆரிசியர் சங்கங்கள் வன்மையாகக் கண்டிக்கின்றது.
எனவே
ஆசிரியர் சமூகத்தையும் அதிபர் சமூகத்தையும் கல்விச் சமூகத்தையும் பெண்கள் சமூகத்தையும் கீழ்த்தரமாக அவமானப்படுத்திய முதலமைச்சர், மாகாண கல்வி அமைச்சின் செயலாளர், மாகாண கல்விப் பணிப்பாளர், வலயக் கல்விப் பணிப்பாளர் ஆகியோரை உடனடியாக பதவி நீக்கு, முதலமைச்சர், மாகாண கல்வி அமைச்சின்
செயலாளர், மாகாணக் கல்விப் பணிப்பாளர், வலயக் கல்விப் பணிப்பாளர் ஆகியோரை உடனடியாக பதவி நீக்கு, அவர்களை உடனடியாக ஒழுக்காற்று நடவடிக்கைகக்கு உட்படுத்துக.

இடம் – ஹட்டன் பஸ் தரிப்பு நிலையம்
காலம் – 30–01–2018 செவ்வாய்க் கிழமை பி.ப 2.00 மணி

ஆசிரியர்கள், அதிபர்கள், சிவில் சமூகதினர் அனைவரையும் இவ்வவமானப்படுத்தல்களுக் கெதிரான ஆர்ப்பாட்டத்தில் கலந்து கொண்டு ஆதரவு தெரிவிக்குமாறு அழைக்கின்றோம்.

ஜோசப் ஸ்டேலின்
இணைப்பாளர்

இலங்கை ஆசிரியர் சங்கம்.
மலையக ஆசிரியர் முன்னணி, ஆசிரியர் விடுதலை முன்னணி, இலங்கை கல்வி சமூக சம்மேளனம், இலங்கை ஜக்கிய தமிழர் ஆசிரியர் சங்கம் .

Related Articles

Leave a Reply

Your email address will not be published.

Back to top button