நிகழ்வுகள்பதுளை

பதுளை தமிழ் மகளிர் மகா வித்தியாலய மாணவத் தலைவர் பயிற்சியாளர்களுக்கான சின்னம் சூட்டும் நிகழ்வு…

பசறை நிருபர்.

பதுளை தமிழ் மகளிர் மகா வித்தியாலய மாணவத் தலைவர் பயிற்சியாளர்களுக்கான சின்னம் சூட்டும் நிகழ்வு அண்மையில் பாடசாலை மைதானத்தில் பாடசாலை அதிபர் திருமதி. பவானி தலைமையில் இடம்பெற்றது.

இந்நிகழ்வின் சிறப்பு அதிதிகளாக இப்பாடசாலையில் கல்வி பயின்று கொழும்பு பல்கலைக்கழகத்தின் சட்டப் பீடத்திற்கு தெரிவாகி, அங்கு முதல் தரத்தில் சித்தி பெற்ற சட்டத்தரணி செந்தமிழ்செல்வன் மதுஷிதா, சட்டத்தரணி செல்வகுமார் பிரசாந்தினி ஆகியோர் கலந்து கொண்டு மாணவிகளுக்கு சின்னங்களை சூட்டினர்.

இந்நிகழ்வில் பாடசாலையின் பிரதி அதிபர் உட்பட ஆசிரியைகளும் கலந்து கொண்டனர்.

நிகழ்வின் சில காட்சிகளை படங்களில் காணலாம்.

Related Articles

Back to top button
WP2Social Auto Publish Powered By : XYZScripts.com